2009/09/17

தலைமை - ஒரு பார்வை

போக்கற்ற சிந்தனை

மேலாண்மை மற்றும் தலைமை பற்றி அறிந்து கொள்ள நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. தினம் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் மேலாண்மை, தலைமை பற்றி அலசுகிறார்கள். போதாவிட்டால், ஆயிரக்கணக்கில் செலவு செய்து பொது மன்றங்களில் இவற்றைப் பற்றி வம்பளக்கவும் பேசவும் கேட்கவும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதுவும் போதாவிட்டால், கல்லூரிகளிலும் அலுவலகங்களிலும் அரை நாள் ஒரு நாள் என்று கணக்கிட்டு இவற்றைப் பற்றிப் பேசவும் விவாதிக்கவும் பேராசிரியர்களும் தொழிலதிபர்களும் போட்டி போட்டுக் கொண்டு வந்து விவரங்களை அள்ளிக் கொடுப்பதை பணம் கொடுத்தோ இலவசமாகவோ பெற்று ஞானம் பெற வழி இருக்கிறது.

இந்த ஞானம் போதுமா, இதற்கு மேலும் வேணுமா?

இடையில் அரைகுறை ஞானிகள் வேறு புகுந்து கொள்கிறார்கள் (என்னைப் போல்). இணையத்தில் இன்றைய ஸ்பெஷலாக இயங்கிக் கொண்டிருக்கும் லிங்க்டின், ட்வீடர்களில் விவாதங்கள். சமீபத்தில் லிங்க்டின் உறுப்பினர் ஒரு கேள்வி கேட்டிருந்தார், 'புதிதாக மேனேஜராகி இருக்கும் எனக்கு ஏதாவது அறிவுரை கொடுப்பீர்களா?' என்று. வசமாகச் சிக்கிக் கொண்டார். பக்கம் பக்கமாக பதில்கள். ஏதாவது தந்திரம் இருந்து நாமும் கற்றுக் கொள்வோமென்று படித்தால், உருப்படியாக ஒன்று கூட இல்லை. Performance Metrics, Goals, Governance, Review என்று தனக்குக் கீழே வேலை பார்க்கும் நபர்களைக் கண்காணிக்க வழி சொல்கிறார்களே தவிர, பணி மற்றும் சுய வளர்ச்சிக்கான வழிகளைச் சொல்லக் காணோம். நூற்றுக்கணக்கில் கருத்துகள். எல்லாம் பூண்டு, நல்லெண்ணை இட்டு வறுத்த மொச்சக்கொட்டையைத் தின்று விட்ட குசு. அவ்வளவுதான் சொல்வேன்.

வளர்ச்சிக்கான பாதையைக் காட்டாமல், குறிக்கோளையும் கண்காணிக்கும் வழிமுறைகளை மட்டும் செயல்படுத்தினால் என்ன பயன்?

நண்பர் ஒருவரின் நிறுவனத்தில் புதிதாக வந்து சேர்ந்திருக்கும் தலைமையதிகாரி, தன்னுடைய தலைமைத் திறனைக் காட்ட வேண்டுமென்று அந்த கம்பெனிக்கான தொலைநோக்கை அறிக்கையாக வெளியிட்டாராம். "இந்த கம்பெனிக்கான உங்க விசன் என்ன?" என்று கேட்ட போது, புது ஆசாமி "விற்பனையில் நானூறு மிலியன் டாலர் அடைய வேண்டும்" என்றாராம்.

"ஐயா, புதிதாக வந்திருக்கிறாய். இந்த கம்பெனி பத்து வருடங்களாக விற்பனையில் ஒரே தட்டில் நிற்கிறது. கம்பெனி வளர்ச்சிக்கான முறைகள், இங்கே வேலை பார்க்கும் என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான பேர்களுக்கான வளர்ச்சி, நம் கம்பெனியின் பொருட்களை வாங்கி உபயோகிக்கும் வாடிக்கைக்காரர்களின் வளர்ச்சி, இன்னும் பத்து வருடங்களில் நடக்கக்கூடிய வணிக, பொருளாதார, தொழில் தந்திர மாற்றங்களைப் பற்றிய தொலைநோக்கான கருத்துகள் என்று இவற்றையெல்லாம் விட்டு 'இத்தனை விற்க வேண்டும்' என்று ஒரே வரியில் தொலைநோக்கை வெளியிட்டிருக்கும் நீயெல்லாம் ஒரு தலைமையதிகாரியா?" என்று கேட்கவில்லை நண்பர். (கேட்டிருந்தால் என்னைப்போல் வேலையில்லாத் திண்டாட்டத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருப்பார்)

"சரி ஐயா, இத்தனை விற்க வேண்டுமென்றீர்கள். அந்த வளர்ச்சியை எப்படி அடைவது என்ற உங்கள் எண்ணத்தை விவரமாக சொல்லுங்கள்" என்று கேட்டால், கூட்டம் போட்டு "இத்தனை நாள் நடந்து கொண்ட முறையை மாற்றி அதிகமாக விற்க வேண்டும்" என்றாராம்!

அடடா! என்ன தொலைநோக்கு! என்ன அறிவு! எத்தனை மேம்பட்ட தலைமை! இந்தத் தலைவரை எண்ணி வருந்துவதா? இவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கும் நண்பரையும் அவருடைய அலுவலகத்தில் வேலை செய்யும் மற்றவரையும் எண்ணி வருந்துவதா? 'இத்தனை விற்க வேண்டும்' என்பது என்றைக்கு தொலைநோக்கானது? குறைநோக்கு அல்லது தொல்லைநோக்கு என்று சொல்ல வேண்டும்.

கவுண்டமணியின் கிண்டல் வரி ஒன்று நினைவுக்கு வருகிறது. "குண்டூசி விக்குறவனெல்லாம் இப்ப தொழிலதிபர்ன்றானுங்க".

என்னுடைய பங்குக்கு நானும் நிறைய புத்தகங்கள் படித்திருக்கிறேன். இந்த ஒரு புத்தகம் மட்டும் நினைவில் நிற்கிறது. வழங்கியவர் ஜேக் வெல்ச். மிகப்பிரபலமான கம்பெனியின் ஓய்வு பெற்ற தலைவர். இவருடைய தலைமையை உலகமே மெச்சுகிறது (அனேகமாக). ஒரே ஒரு முறை இவரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. ஆனால் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் வரை இவருடைய செயல்முறை மற்றும் style பற்றி அறியும் வாய்ப்பு கிடைக்கவில்லை. உண்மையிலேயே ஜேக் வெல்ச் ஒரு சிறந்த தலைமையதிகாரியாக இயங்கினாரா என்பது அவருக்குப் பல தட்டுகளுக்குக் கீழேபணி புரிந்த GE நிறுவனத்தாருக்குத் தான் தெரியும்.

புத்தகத்துக்கு வருகிறேன். எல்லாப் புத்தகங்களைப் போல் இந்தப் புத்தகத்திலும் நிறைய மொச்சக்கொட்டை விவகாரம் இருந்தாலும், நடைமுறையில் கடைபிடிக்க முடிகிற தத்துவங்களை அங்கங்கே அள்ளிக் கொடுத்திருக்கிறார். ஒரு மேலதிகாரியாக எப்படி இயங்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை உதாரணங்களோடு காட்டியிருக்கிறார். இவரையும் இவர் தலைமை தாங்கி நடத்திய நிறுவனம் பற்றிய தனிப்பட்ட கருத்துகள் வேறுபட்டாலும், மேலாண்மை மற்றும் தலைமை பற்றி செயல்முறையாக, நடைமுறையாக, அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் இந்தப் புத்தகத்தை அவசியம் படிக்க வேண்டும். 'jack: Straight from the gut' written by Jack Welch and John Byrne. தான் GE நிறுவனத் தலைமையதிகாரியாக இருந்த இருபது வருடங்களின் நினைவுத் தொகுப்பை புத்தக வடிவில் வழங்கியிருக்கிறார் ஜேக் வெல்ச். எப்போதோ வந்த புத்தகம். எக்கச்சக்கமாக விற்பனையான புத்தகம். முன்பே ஒரு முறை படித்திருந்தாலும், சமீபத்தில் ஒரு நேர்முகத் தேர்வுக்குச் சென்ற போது இதை மீண்டும் படித்தேன்.

இந்தப் புத்தகத்தில் வழங்கப்பட்டிருக்கும் கருத்துக்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதலாவது, வளர்ச்சிக்கான தொலைநோக்கு மற்றும் குறிக்கோள்களை எப்படி நியமிப்பது? இரண்டாவது, வளர்ச்சிக்கான வழியில் செல்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள், செல்லும் நபர்களுக்கு இருக்க வேண்டிய குணச்சித்திரங்களை எப்படி அறிவது, எப்படி முன்னேற வைப்பது? இரண்டையும் அறிந்து கொண்டால் நல்ல தலைமையதிகாரியாகலாம் என்ற நன்னெறியோடு முடிகிறது புத்தகம். அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்களுள் ஒன்று.

இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்திருக்கலாம். படிக்க நேரம் எடுத்துக் கொள்ளாதவர்களுக்காக, இந்தப் புத்தகத்தில் வழங்கப்பட்டிருக்கும் மொச்சக்கொட்டையல்லாத என்னைக் கவர்ந்த கருத்துகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறேன். மேலாண்மைக்கான ஒரு வரித் தந்திரங்கள். மனவசம் வைத்துக் கொள்ளுங்கள். நேரம் கிடைக்கும் போது புத்தகத்தைப் படியுங்கள்.

அதற்கு முன்.

வளர்ச்சிக்கான தொலைநோக்கு என்றால் என்ன? தொலைநோக்குத் திறனை எப்படி வளர்ப்பது? இவற்றைப் பற்றியும் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. எல்லாம் மொச்சக்கொட்டை. என் கருத்தில், தொலை நோக்குந்திறன் புத்தகம் படிப்பதால் வருவதல்ல. 'இது தான் தொலைநோக்கு' என்பதை குறியிட்டுக் காட்ட இயலாது என்று நினைக்கிறேன். சிலருடைய தொலைநோக்கைப் பற்றிப் படித்தறிந்த பின் பிரமித்திருக்கிறேன். காலத்தை வென்று நிற்பது தொலைநோக்கின் ஒரு இரகசியம் என்று நினைக்கிறேன். தொலைநோக்கு மிகச் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அதன் தாக்கம் காலச்சுவடாகப் படிந்திருக்கும். உதாரணமாக, நம் ஆண்டுக்கணக்கை சமீபம் வரை, B.C மற்றும் A.D என்று கிறுஸ்துவை ஒட்டித் தானே கணக்கிட்டு வந்தோம்? இப்போதும் நிறைய பேர் அப்படித் தான் கணக்கிடுகிறார்கள். கிறுஸ்துவுக்கும் ஆண்டுக் கணக்கிற்கும் என்ன தொடர்பு? சாதாரண விஷயமாக இருந்தாலும், இது நம் உலக சரித்திரத்தை இரண்டாகப் பிரிக்க ஒரு மதவாதக் கூட்டம் செய்த தந்திரம். தொடர்பு ஏற்படுத்திய கிறுஸ்துவ மதத் தலைவர்களின் தொலைநோக்கைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இது தான் தொலைநோக்கா? அப்படிச் சொல்லி விட முடியாது. தொலைநோக்கை விவரமாகச் சொல்லவும் தெரிந்திருக்க வேண்டும். இந்தப் பாடலைக் கேளுங்கள். ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன் வந்த பாடல். One of the best examples of vision, imo.
தலைமை - ஒரு பார்வை | 2009/09/17


'கவியைப் பாடி காத்து மழையுண்டாக்கப் போறேன்' வரியை மறக்க முடியவில்லை. நடக்கக் கூடிய சாத்தியம் உண்டா? இந்தப் பாடலில் இடம் பெற்றிருக்கும் கற்பனை எல்லாமே இன்று சாத்தியமாகி இருக்கின்றன. இருந்தாலும் அந்த வரியின் புதுமையும் ஆணவமும் மனித சக்தியின் மகத்துவத்தை வெளிப்படுத்தி, கேட்கும் போதெல்லாம் மயிலிறகாய்த் தாக்குகிறது. Voice activated weather, anyone?

அவருடைய தொலைநோக்கு அப்படி. சில்லறை ஆசாமி என்னுடைய தொலைநோக்கு? விடுங்க சாமி. எனக்காகத் தான் இதை எழுதியிருக்கிறார் இன்னொரு கவி.
தலைமை - ஒரு பார்வை | 2009/09/17


புத்தகத்தை மறந்து விட்டேனே? காதல் சன்னியாசியை நினைத்தால் இப்படித் தான். புத்தகத்தில் என்னைக் கவர்ந்த கருத்துக்களின் தொகுப்பு இதோ:

• Basic management beliefs - competing hard to win, facing reality, motivating people by alternately hugging and kicking them, setting stretch goals, and relentlessly following up on people to make sure things get done
• Business is a lot like a world class restaurant. When you peek behind the kitchen doors, the food never looks as good as when it comes to your table
• Building self-confidence in others is a huge part of leadership
• There are no finite answers to many questions. What really matters is the thought process
• Bosses usually have answers in mind when they hand out questions. To stand-out from the crowd, don't provide answers; provide the unexpected fresh perspective
• Differentiation is about being extreme, rewarding the best and weeding out the ineffective. Rigorous differentiation delivers real stars - and stars build great businesses
• Everybody's got to feel they have a stake in the game. That doesn't mean everyone on the team needs to be treated the same way. Winning teams come from differentiation, rewarding the best, removing the weakest, always fighting to raise the bar
• Quitting doesn't get you out of the pile
• When people make mistakes, the last thing they need is discipline. The job at this point is to restore self-confidence
• Being tough minded and straight forward is the job. So is sensing when to hug and when to kick. Arrogant people have to go. Good people who are eating themselves over an error, our job is to help them through it
• Don't have to take it easy on your top performers
• Using a role model helps make a point to a large group. You can do a negative role model act with your best - as long as they know they are your best
• Set apart small ideas with big potential, give people resources to turn small projects into big businesses
• Everyone in the company has to know that taking a big swing and missing is okay
• Every promotion, every raise, every bonus is a cause for celebration
• Being without regard for any previous leaders of the business, is being an ass
• No one should be ever surprised that they are asked to leave
• During change or transition, the biggest challenge is to get everyone focused on the future
• Don't tolerate 'milk run' sales force - who couldn't find new accounts to save their lives
• Tension between head quarters and field is common in every organization. While the bureaucracy can frustrate, try not to be a visible critic - especially not to the higher ups
• Never be late for meetings
• Realize the importance of getting the right people. Success depends on the people you hire. Makes all the difference in the world. Have an intense obsession about people
• Cut losses quickly on bad hires, slick-talking packages, empty suits. In the hands of the inexperienced, resumes are a dangerous weapon
• Kind performance appraisals would come back and haunt
• There is nothing worse in a business than to work for a boss who doesn't want you to win. This can happen anywhere, at any level, and occurs more often than we think
• You don't have to build scale to be competitive
• Leveraging brainpower is easier than grinding out products
• Understand profit per employee vs. revenue per employee
• Demand high performance standards; provide 'leapfrog' opportunities to promising employees; create an atmosphere that attracts talent and ambition. Beware of 'ambition on sleeve'
• Each business leader needs to have the same authority the board gives the CEO
• Managers must not consider their positions a career capstone, but as a fresh opportunity
• Management has a tendency to take the smallest bite of the cost apple. A business is never ruined because it reduced its costs too much, too fast
• In a business plan, there is little percentage in betting on hope
• Beware of superficial congeniality. Self-delusion can grip an entire organization and lead people into ridiculous conclusions
• Search out and participate in real growth industries and insist upon being number one or number two in every business (இந்தக் கருத்தைப் பின்னாளில் அவரே மாற்றிக் கொண்டார்)
• Vision: People must be encouraged to see things as they are, deal with the way it is, not the way they wished it would be, but to being winners of the future.
• Leaders don't accept lay-ups
• Accounting doesn't generate cash, managing businesses does
• If you want excellence, at a minimum, workplace ambience has to reflect excellence
• Pay the highest wages, while having the lowest wage costs
• Manage long-term, while 'eating' short-term. Test of a leader is balancing the two
• Function as one organization with different styles
• Have the vision to be the first to move out of troubled businesses. If you are the last, your people could be in the unemployment line
• Do more for your people if your balance sheet lets you (வேறுபாட்டைக் கவனிக்கவும். P&L என்று சொல்லவில்லை)
• Any organization that thinks it can guarantee job security is going down a dead end
• Give people the skills, resources and experiences that guarantees 'employability', not 'employment'
• Leaders don't like 'I think' answers
• While media focuses on the 'layoffs', leaders focus on the 'keepers'
• Change doesn't come from a slogan or speech. It happens because you put the right people in place to make it happen (ஒபாமாவுக்கு யாராவது எடுத்துச் சொல்ல வேண்டும்)
• Finance and Audit must be business supporters, not corporate police
• 'A's hire 'A's
• In spite of outward appearance, leaders are a cautious bunch. Not tough-minded enough
• Visionary leaders consciously build 'hiding places' to ensure business longevity
• Routinely wallow
• Always look for strategic options in acquisitions; the emotional lift from a transaction is every bit as important
• Finding great people happens in all kinds of ways; everyone you meet is another interview
• Build great people, who then would build great products and services
• In manufacturing, stamp out variance; in people, variance is everything
• 360 degree evaluations can be gamed; can create 'horse's asses', people kissing up and down
• Force business leaders to differentiate their leadership. This is how great organizations are built (GEன் பிரபல 'vitality curve' பற்றி அறிந்து கொள்ளலாம்)
• Leaders are aware that change has no constituency - and a perceived revolution has even less
• Create energy centers to facilitate decisions to 'take unnecessary work out of the system' (GEன் பிரபல work-out சித்தாந்தத்தைப் பற்றிய விவரத்திலிருந்து)
• Create a boundaryless organization, opening up to best ideas from employees and from outside companies
• Leaders understand their four types of managers
    o Type 1: delivers on commitments and shares values. Easy call
    o Type 2: does not meet commitments and does not share values. Not pleasant, but an easy call
    o Type 3: misses commitments, but shares all values. Give them a second or third chance
    o Type 4: delivers on commitments, does not share values. Difficult call. A boundaryless organization cannot afford them
• Excellence and competitiveness aren't incompatible with honesty and integrity
• Six Sigma isn't only for engineers; it is for the best and brightest in any function
• A CEO's primary social responsibility is to assure the financial success of the company
• People first; strategy second

என்னுடைய ஆசான் அரசன், மூன்று வகைத் தலைவர்களைப் பற்றி வகுப்பில் அடிக்கடி வித்தியாசப்படுத்திச் சொல்வார்: தெரிந்தவன், புரிந்தவன், அறிந்தவன்.

அறிந்தவன் தான் உண்மையில் தலைவனாகிறான்.
தலைமை - ஒரு பார்வை | 2009/09/17

12 கருத்துகள்:

  1. Very excellent write up. Impressive - by content and the songs you have included in this post.
    Thank you.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. Beautiful writing.

    The lines you have chosen from the book are very impressive.

    Thanks.

    பதிலளிநீக்கு
  4. /அறிந்தவன் தான் உண்மையில் தலைவனாகிறான்./

    எதை அறிந்தவன்? இந்தியச் சூழ்நிலைகளில் இந்தக் கேள்விக்குக் கிடைக்கும் விடையே வேறு.

    ராமகிருஷ்ண கதாம்ருதத்தில் வருகிற ஒரு கதை:

    தானிய மூட்டைகள் அடுக்கி வைத்திருக்கிற கிடங்கில், அந்தநாட்களில் வெள்ளப் பொறியை நிறையத் தூவி வைத்து விடுவார்களாம். எலிகளும், விழியே கிடக்கும் பொறியோடு திருப்தி அடைந்து மூட்டைகளை விட்டு வைக்குமாம்.

    அதுபோல, இங்கே, மீனுக்குத் தூண்டிலில் ஒரு புழுவை வைக்கிற மாதிரி, சின்னச் சின்ன இலவசங்களை அறிவித்து விட்டு, மொத்தத்தையும் சுருட்டிக் கொண்டு போய்க் கொண்டிருக்கிற சூழலில்,
    தெரிந்தவன், புரிந்தவன், எல்லோருமே முட்டாளாக்கி கொண்டிருக்கிறார்கள்.

    இங்கே, அடுத்தவரை எப்படி முட்டாள்களாக்குவது என்பதை அறிந்தவனே, தலைவனாகிறான்! இருக்கிறான்!

    பதிலளிநீக்கு
  5. My husband used to work for GE until five years ago. Thinks Jack wasn't that great. He believes Jack has created a slow moving organization.

    Nevertheless, great concepts. Good synthesis of a 500 page book. Good work. I will give a print out to my boss :)

    பதிலளிநீக்கு
  6. நன்றி kggouthaman, meenakshi.

    Priya. Your husband may be right. Only people who worked within a couple levels below him would know what kind of a leader he really was.

    In my opinion, he was one of the best business leaders in America and should be, if there is one, in business leaders hall of fame. Let us look at his contemporary companies in his and comparable industries. All his contemporary leader 'businesses' viz., ATT, Amoco, Sears, Panam, Motorola, Big3 auto companies, Zenith, Westinghouse.... where are they? Lost in identity crisis, gobbled up or in plain sedentary survival. Even the major banks are gone!

    Of course, one could give many reasons pointing out to economy, regulations, etc, but aren't business leaders expected to steer their ship from such unexpected troubles? I was impressed at GE's rationale for acquiring NBC and RCA.

    Growth creates monstrosity, no doubt. I hope GE is a good monster with manners.

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கு நன்றி, ex-banker கிருஷ்ணமூர்த்தி. (Once a banker, always a banker :-)

    நீங்கள் சொல்றதும் சரிதான். இந்தச் சூழ் நிலையில் கூட அறிந்தவன் தான் (மோசமான) தலைவனாகிறான்.

    திருடனாய்ப் பார்த்து திருந்தினாலொழிய திருட்டை ஒழிக்க முடியாது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  8. GE ரொம்ப சீப்பான கம்பெனினு இந்தியாவுல நிறைய பேர் நினைக்கிறாங்க. Quality பத்தி ஜேக்கண்ணாச்சி சொல்லியிருக்குறது கொஞ்சம் யோசிக்க வைக்குது. இத்தனை six sigma (ஏதோ நமக்கும் கொஞ்சம் தெரியுமுங்க, அதேன்) என்று சொல்பவர் கம்பெனி பொருட்களின் தரம் அவங்க சுத்துல இருக்குற மத்த கம்பெனிங்களை விட ரொம்ப கம்மி. சேம்சங்க், பேனசானிக், எல்.ஜி, நம்ம ஊர் டாடா தயாரிப்புங்க இதெல்லாம் GE விட தரத்தில் ரொம்ப மேலுங்க. எனக்கென்னவோ GE நம்ம ஊர் Reliance, L&T கம்பெனிங்க போலனு படுது - உதார் அதிகம்.

    அவர் சொல்லியிருக்குற யோசனைங்க எல்லாம் அருமையான யோசனை தான். எடுத்து கொடுத்ததுக்கு நன்றி. ப்ரியாம்மா சொன்னாப்புல ஒரு பிரதி எடுத்து ஆபீஸ்ல ஒட்டி வைக்கலாம். கல்லுன்னா கல்லு. சாமின்னா சாமி.

    சாமின்னதும் நினைவுக்கு வருது. ஏன் சாமி, அந்த சன்னியாசி சாமி பாட்டை முழுக்கமா போடக்கூடாது? இப்படி ஊறுகா போல தொட்டுக்க வச்சுட்டீங்களே?

    'business leaders hall of fame'னு போட்டிருக்கீங்க. ஒரு வோட்டு தான் உண்டுன்னா யாருக்கு போடுவீங்க?
    Jack Welch or JRD Tata?

    (எல்லாம் kggouthaman தொடங்கி வச்சது).

    பதிலளிநீக்கு
  9. // (எல்லாம் kggouthaman தொடங்கி வச்சது)//
    கடவுளே கடவுளே -- !
    ஆளுக்காளு ஒரு பக்கம் இழுத்து,
    கடித்துக் குதறிவிட்டு - கடோசியில
    இப்பிடி ஒரு மாங்கா இடிப்பா!
    டேய் கௌதமா ---
    உனக்கு இது வேணுண்டா, வேணும் !!

    பதிலளிநீக்கு
  10. Appadurai Said:

    "நண்பர் ஒருவரின் நிறுவனத்தில் புதிதாக வந்து சேர்ந்திருக்கும் தலைமையதிகாரி, தன்னுடைய தலைமைத் திறனைக் காட்ட வேண்டுமென்று அந்த கம்பெனிக்கான தொலைநோக்கை அறிக்கையாக வெளியிட்டாராம். "இந்த கம்பெனிக்கான உங்க விசன் என்ன?" என்று கேட்ட போது, புது ஆசாமி "விற்பனையில் நானூறு மிலியன் டாலர் அடைய வேண்டும்" என்றாராம்."

    I guess your friend must be wondering why he shared his / her internal stuff to you. I thought you write stories based on what happens in conversation with others. Even this Pokkattra Sindhanai ?

    - Sairam Gopalan

    பதிலளிநீக்கு
  11. "மொச்சக்கொட்டையைத் தின்று விட்ட குசு"

    நவராத்திரி அதுவுமா மொச்சைக்கொட்டை சுண்டலுடன் கூடிய குசு பத்தி ரொம்ப அவசியம் !!

    அந்த நாட்களில் நானும் என் அண்ணனும் குரொம்பெட்டையில் வீடு வீடாக சென்று சுண்டலுக்காக அடுக்களை கதவை நோக்கி மாமிகளின் சுண்டல் பொட்டலத்துக்காக கொலுவின் முன் உட்கார்ந்து எழுந்தது நினைவுக்கு வருதே !!

    யார்யாரோ வீட்டில் கண்டபடி சுண்டலை தின்று சர்வோதயா ஸ்கூலை வாயு பகவான் ஆருளால் திணற அடித்திருக்கிறோம் !!

    - சாய்ராம் கோபாலன்

    பதிலளிநீக்கு
  12. / murungaimaram கூறியது...
    ஒரு வோட்டு தான் உண்டுன்னா யாருக்கு போடுவீங்க?/

    கண்டிப்பாக JRD. JRD முன்னால் ஜேக்கண்ணாச்சி சொத்தை. ஒப்பிடுவதே சரியாகாது.

    பதிலளிநீக்கு