2010/06/11

நிழலின் ஒளி



அயர்ச்சி.
அப்போது பூத்த மலர் உடனே வாடுவது போல் அயர்ச்சி.
காற்றிலே வெப்பம். கண்களில் இருள்.
அமர்ந்திருந்தேன். அருகில் வந்தது ஒளி.
பேசும் ஒளி ஏனென்றது.
கவலை என்றேன்.
அடித்து நொறுக்கும் அப்பனிடமிருந்து விடுதலை கிடைக்காதா?
ஒளி மௌனமானது.
கண்களை மூடினேன். இருளைக் காணவில்லை.
காற்று வீசியது.
அடுத்த வாரம் அப்பன் இறந்தான்.

தளர்ச்சி.
அப்போது சேர்த்த ஊட்டம் உடனே கரைவது போல் தளர்ச்சி.
காற்றிலே வெப்பம். கண்களில் இருள்.
அமர்ந்திருந்தேன். அருகில் வந்தது ஒளி.
பேசும் ஒளி ஏனென்றது.
கவலை என்றேன்.
எத்தனை படித்தும் வேலை கிடைக்கவில்லையே?
ஒளி மௌனமானது.
கண்களை மூடினேன். இருளைக் காணவில்லை.
காற்று வீசியது.
அடுத்த வாரம் வேலை கிடைத்தது.

அதிர்ச்சி.
அப்போது பறித்த கனியை அடுத்தவன் பிடுங்கும் அதிர்ச்சி.
காற்றிலே வெப்பம். கண்களில் இருள்.
அமர்ந்திருந்தேன். அருகில் வந்தது ஒளி.
பேசும் ஒளி ஏனென்றது.
கவலை என்றேன்.
காதலித்தப் பெண்ணுக்கு இன்னொருவனை முடிக்கிறார்களே?
ஒளி மௌனமானது.
கண்களை மூடினேன். இருளைக் காணவில்லை.
காற்று வீசியது.
அடுத்த வாரம் காதலியுடன் ஓட்டம்.

உழற்சி.
அப்போது படித்த தமிழ் உடனே மறப்பது போல் உழற்சி.
காற்றிலே வெப்பம். கண்களில் இருள்.
அமர்ந்திருந்தேன். அருகில் வந்தது ஒளி.
பேசும் ஒளி ஏனென்றது.
கவலை என்றேன்.
பாசப் பிள்ளைகளுக்கு பகிர்ந்தளிக்கச் செல்வமில்லையே?
ஒளி மௌனமானது.
கண்களை மூடினேன். இருளைக் காணவில்லை.
காற்று வீசியது.
அடுத்த வாரம் லாட்டரியில் பரிசு.

அதிர்ச்சி.
அப்போது பிறந்த உயிர் உடனே பிரிவது போல் அதிர்ச்சி.
காற்றிலே வெப்பம். கண்களில் இருள்.
அமர்ந்திருந்தேன். அருகில் வந்தது ஒளி.
பேசும் ஒளி ஏனென்றது.
கவலை என்றேன்.
அன்பு மனைவியின் நோய் என்று தீரும்?
ஒளி மௌனமானது.
கண்களை மூடினேன். இருளைக் காணவில்லை.
காற்று வீசியது.
அடுத்த வாரம் மனைவியின் மரணம்.

தளர்ச்சி.
அப்போது குடித்த நீர் உடனே வரண்டது போல் தளர்ச்சி.
காற்றிலே வெப்பம். கண்களில் இருள்.
அமர்ந்திருந்தேன். அருகில் வந்தது ஒளி.
பேசும் ஒளி ஏனென்றது.
கவலை என்றேன்.
எத்தனை சிறந்தும் எத்தனை வளர்ந்தும் கவலை தீரவில்லையே?
ஒளி சிரித்தது.
கண்களை மூடினேன். இருள்.
காற்று நின்றது.
அடுத்த வாரம் இன்னொரு யுகம்.

அயர்ச்சி.

27 கருத்துகள்:

  1. நல்லா இருக்குன்னு சொல்லிக்கறேன்...காமதேனு டைப் ஒளியா அது..?

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு சி யும் ஒவ்வொரு அனுபவத்தை சொல்கிறது.

    பதிலளிநீக்கு
  3. அப்பா...நிறைய யோசித்து எங்களையும் யோசிக்க வைத்த கவிதைகள்.வாழ்வியல் சொல்லிப் பிரித்திருப்பது அழகு.

    பதிலளிநீக்கு
  4. வாசித்து முடிக்கையில் எனக்கு மலர்ச்சி ...
    தத்துவ மறுமலர்ச்சி ...
    எப்போதும் கூடவே வரும் நிழல் ஒளியின் சிரிப்பு சப்தத்தில் எனது தூக்கம் கலையட்டும் ...
    வருகிறேன் தோழர் !

    பதிலளிநீக்கு
  5. நலவிரும்பிஜூன் 12, 2010

    சுழலின் நிழல் பொருத்தமான தலைப்பென்று எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. நல்லா இருக்கு!

    பதிலளிநீக்கு
  7. காமதேனுவே கிடைத்தாலும் விசுவாமித்திரர் வந்துவிடுவாரே என்ற கவலை வந்துவிடும், ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  8. இதென்ன ஸ்ரீராம், கீதா, மீனாக்ஷி எல்லாரும் 'நல்லா இருக்கு'னு ஒரே கருத்தைச் சொல்றீங்க... நல்லா இல்லைனு சொல்றாப்பல இருக்குதே? இந்தக் கதையெல்லாம் வேண்டாம்... நான் எழுதுறது தான் கவிதை, இதைப் படிக்க வேண்டியது உங்க தலையெழுத்து...

    ஹி ஹி... அதுல பாருங்க... ஹேமா ஹேமானு ஒருத்தர் கவிதை எழுதுறாரு.. அவங்க கவிதைல என் அறிவுக்கு மீறின வார்த்தைகளும் அர்த்தங்களும் சும்மா வெளையாடும். சரி, நாமளும் இப்படி ஒருத்தருக்கும் புரியாம எழுதணும்னு ஒரு ஆசை வந்துடுச்சு.. அதான். (சும்மா சொன்னேன் ஹேமா.. :)

    பதிலளிநீக்கு
  9. >நியோ கூறியது... வாசித்து முடிக்கையில் எனக்கு மலர்ச்சி ...

    ..கவிதை ஒருவழியாக முடிந்ததால் என்று சொல்ல வருகிறீர்களென்று நினைத்தேன், நியோ.

    பதிலளிநீக்கு
  10. >>நிறைய யோசித்து எங்களையும் யோசிக்க வைத்த கவிதைகள்

    யோசனையா? என்னையும் உங்களைப் போல நினைச்சுட்டீங்களா ஹேமா? நான் எழுத யோசிச்சேன்னா காலிப்பானைனு அர்த்தம்; நீங்க படிச்சு யோசிச்சீங்கன்னா நான் எழுதியது புரியும்படியில்லைனு பொருள்:) நீங்க படிச்சதுக்கே நன்றி.

    சமீப அனுபவம். சாலை நெரிசல் வடியக் காத்திருந்த கணங்களில் கவலைப்பட்டேன். கவலைப்படுவதால் ஒரு பயனும் இல்லை என்பதை உணர்ந்தும் கவலைப் பட்டேன். அப்போது தோன்றிய கவிதைக் கரு.

    பதிலளிநீக்கு
  11. மிகச் சி... மிகச்சரி, தமிழ் உதயம். நன்றி.

    பதிலளிநீக்கு
  12. கவனிக்கத் தவறிவிட்டேனே?
    நலவிரும்பி.. தலைப்பில் திருத்தம்... ம்ம்ம்ம்...நலந்தானா? ரொம்போ டாங்க்ஸ் வாத்யாரே.

    பதிலளிநீக்கு
  13. //அடுத்த வாரம் லாட்டரியில் பரிசு.//

    அண்ணே, துரை அண்ணே.... சொல்லுங்கண்ணே - எத்தினி தேறும் ! ஏதோ உறவு ஜெனமா போய்ட்டோம், ஏதோ அஞ்சு பத்து இந்தக்கல வீசறது ?

    என் பெரிய பிள்ளையும் படிப்புக்கு இன்னும் மூணு வருஷத்தில் வருவாண்ணே. ஏதாச்ச்சும் பாத்து செய்யுங்கண்ணே ! புண்ணியாமா போவும் உங்களுக்கு.

    ஏதோ எம்.ஐ.டி, ஸ்டான்போர்ட், இல்லே யு.சி. பெர்கேலி, ஹார்வார்ட், கார்நெல் என்று பயபுள்ளே பார்க்கிறான். அநேகமாக கடைசி ரெண்டு தேறும் நினைக்கிறேன். ஏனென்றால் இப்போ ரெண்டு வாரமா டாக்டர் படிக்க போவதாக சொல்லிக்கொண்டு இருக்கான்.

    சாமி.....ஐயா தர்மம் செய்யுங்க

    பதிலளிநீக்கு
  14. செக் அனுப்பட்டுமா சாய்ராம்?

    பதிலளிநீக்கு
  15. // அப்பாதுரை கூறியது... செக் அனுப்பட்டுமா சாய்ராம்? //

    துட்டு உன்கிட்டே இருந்தா என்ன, என்கிட்டே இருந்தா என்ன. நீயே வெச்சிக்கோ. கேட்கும்போது கொடு.

    கல்விக்கு தானம் செய்தால் "தற்பெருமை தலை சூடு என்கிறார்கள்" அதனால் பிச்சை எடுக்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன் !!

    ஐயா சாமி.....ஐயா சாமி.....

    தர்மம் செய்யுங்க !!

    பதிலளிநீக்கு
  16. துட்டுன்னும் போதும் உன் கிட்டா இருந்தா என்ன என் கிட்டே இருந்தா என்னல்லாம் சரிவராது... என் கிட்டயே இருக்கட்டும் :)

    செக் கலர் கலரா வச்சிருக்கேன் - சும்மா விடக்கூடாதுபா (நேத்து அனுபவி ராஜா அனுபவி படம்)
    பிச்சையா? வேண்டாம்பா.. பிச்சக்காரக் குடும்பம்னு ஊரே பேசும்பா..

    பதிலளிநீக்கு
  17. அயர்ச்சி .அருமையான கவிதை வாசித்த மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  18. //துட்டுன்னும் போதும் உன் கிட்டா இருந்தா என்ன என் கிட்டே இருந்தா என்னல்லாம் சரிவராது... என் கிட்டயே இருக்கட்டும் :)//

    வயசுலே பெரியவன், நீ சொன்ன கரெக்டா தான் இருக்கும் !!

    செக் கலர் கலரா வச்சிருக்கேன் - சும்மா விடக்கூடாதுபா (நேத்து அனுபவி ராஜா அனுபவி படம்)

    "பாகப்பிரிவினை" படத்தில் "நடிகவேள் எம்.ஆர். ராதா" கொடுத்த செக் எகிறியதற்கு நல்ல ஒரு கமெண்ட் கொடுப்பார். "ஓஹோ பேங்க் திவாலாகி போச்சா; யோவ், காஷ் இல்லை என்பதால் தானே செக் கொடுத்தேன்; அங்கேயே இரு பணம் போடும்போது எடுத்துக்கொள்" என்று சொல்லுவார். அப்படியா இது ?

    //நேற்று அனுபவி ராஜா அனுபவி//

    - நீ ஒரு "அனு"பாவி ! நான் பார்த்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  19. //பிச்சையா? வேண்டாம்பா.. பிச்சக்காரக் குடும்பம்னு ஊரே பேசும்பா..//

    காதலிக்க நேரமில்லை - நான் கிழே போட்ட செருப்பாலே நீ அடிச்சுக்கோ..... வேண்டாம்பா - செருப்பாலே அடிபட்ட குடும்பம்னு ஊரே பேசும்பா ! ஐயோ நாகேஷ்...

    பதிலளிநீக்கு
  20. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி, goma.

    பதிலளிநீக்கு
  21. வலைச்சரம் வழி காட்டியது. பாம்பென்று நினைத்தால் பாம்பு. கயிறென்று நினைத்தால் கயிறு. ஒளி சொல்லியிருக்குமே... :)

    (நல்லாருக்குன்னு மட்டும் சொன்னா கவலைப்படுவீங்களோன்னு... ரொம்ம்ம்பக் கஷ்ஷ்ஷ்டப்ப்பட்டு யோசிச்சி.. :)

    பதிலளிநீக்கு
  22. வலைச்சரத்தில் இந்தக் கவிதையின் அறிமுகம் பார்த்துவிட்டு வந்தேன்.
    ஒளி என்று எதை சொல்லுகிறீர்கள்? நீங்கள் விரும்பியதை நிகழ வைக்கும் பெயரில்லாத ஒரு சக்தி? கடவுள் என்றால் ஒப்புக்கொள்ள மாட்டீர்களே!

    பதிலளிநீக்கு
  23. தாராளமாக ஒப்புக்கொள்கிறேனே ரஞ்சனி, அதனாலென்ன?

    விரும்பியது நிகழ்ந்தது என்றா சொல்கிறீர்கள்?

    புண்ணாக்கிலிருந்து எல்லாவற்றையுமே கடவுள் வடிவமாக எடுத்துக் கொள்ளும் போது ஒளியை விட்டு வைப்பானேன் - கடவுள் என்று சொல்லப்படும் சக்தியை ஒளியென்று வைத்துக் கொண்டால், அதற்கு நிழல் உண்டா? இருளை என்னவென்பது?

    நேற்று மாலை.
    இரண்டு பெக் ஐஸ் கலவா சிங்கில் மால்ட் கடவுள்.
    குடித்து,
    தோல் நீக்கிக் கடவுள் கொழுப்பு குறைத்து கடவுள் மசாலா தடவி
    பதமாக வறுத்த கடவுள் 65.
    சாப்பிட்டு,
    பையில் இரண்டு கடவுள் ப்ரொபிலேக்டிக் சரிபார்த்து
    கடைத்தெருவில் அரை டிராயர் அணிந்த
    DD-G கப் கடவுளைத் தேடிப் போனான்
    கடவுள்.

    இப்படி ஒரு கவதை எழுதினால் எப்படி இருக்கும் என்று யோசிக்கிறேன் :)

    பதிலளிநீக்கு